தமிழ்மொழி தனிஉயர்ச் செம்மொழியாம்; தமிழர்தம் கலைகளும் செம்மையானதாகும். அக்கலைகளுள் இசைக் கலை மற்றும் அதனோடு தொடர்புடைய கருவி இசை ஆகியவற்றின் தொன்மையினை வெளிப்படுத்தும் முயற்சியே இந்நூல். "சங்க இலக்கியத்தில் இசை" என்னும் இந்நூல் தமிழர் இசை சங்க காலத்தில் இருந்து தொடங்குகிறது என்பதை எடுத்தியம்புகிறது.
தமிழிசை குறித்து நூல் எழுதுகின்ற இசையியலாளர்கள் சிலப்பதிகாரத்தை அடிப்படையகக் கொண்டே எழுதுகின்றனர். சிலம்பில் இசை பற்றிய பல சான்றுகள் முழுமையாகப் பதிவுப் பெற்றுள்ளன. ஆனால் சிலம்பிற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது சங்க இலக்கியமே. இந்நூல் தமிழிசையை சிலப்பதிகாரக் காலத்திற்கு முன் சங்க இலக்கியக் காலத்திற்குக் கொண்டு செல்கிறது; 2381 - சங்கப் பாக்களை மட்டும் அடிப்படைச் சான்றுகளாகக் கொண்டுள்ளது.
....................
பொருளடக்கம்:
1. கலைகள்
2. சங்க இலக்கியத்தில் இசை
3. சங்க இலக்கியத்தில் இசைக் கலைஞர்கள்
4. சங்க இலக்கியத்தில் பண்கள்
5. சங்க இலக்கியத்தில் தோற்கருவிகள்
6. சங்க இலக்கியத்தில் துளைக்கருவிகள்
7. சங்க இலக்கியத்தில் யாழ்
8. சங்க இலக்கியத்தில் பல்லியம்
9. சங்க இலக்கியத்தில் தாளம்
10. சங்கத் தமிழரின் இசைநுட்பம்
11. நிறைவுரை
12. பொருளடைவு